ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜா நடிப்பில் வெளியாகி உள்ள மார்டின் பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அர்ஜுன் கதை

அர்ஜுன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காஷ்மீரில் நடந்து வருகின்றது. இந்நிலையில், Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சார்ஜா நடிப்பில் பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம். இந்த படத்திற்கு ஆக்சன் கிங் அர்ஜுன் கதை எழுதி உள்ளார். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட பல படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பு

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சார்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் கதை எழுதி இருப்பதால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here