ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராம்சரண் ஆனந்த் மகேந்திராவுக்கு நாட்டு கூத்து பாடலுக்கான ஸ்டெப்பை கற்றுகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்கருக்கு பரிந்துரை

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் RRR. இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடல், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கு வெளியே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட பாடல் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான RRR பாடல் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ்

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இந்தியாவின் முதல் பார்முலா இ-பிரிக்ஸ் பந்தயம் நடக்கிறது. அதில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ராம்சரண் நடித்த RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாட்டு குறித்து ஆனந்த் மகிந்திரா கேட்டார். உடனே அந்த பாடலில் இடம்பெற்ற ஸ்டெப்பை ராம் சரண் கற்றுக் கொடுத்தார்.

உண்மையான போனஸ்

இந்த வீடியோ ஆனந்த் மகிந்திரா தனது சமூ கவலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் “ஹைதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயம் தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால் நாட்டு நாட்டு பாடலுக்கான ஸ்டேப் எப்படி போடுவது என்பது பற்றி நடிகர் ராம்சரண் கற்றுக் கொடுத்தது தான். நன்றி மற்றும் ஆஸ்கர் விருது பெறுவதற்கு வாழ்த்துக்கள் எனது இனிய நண்பரே” என பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, நடிகர் ராம்சரண், “ஜி என்னை விட விரைவாக ஸ்டெப்பை நீங்கள் போட்டுள்ளீர்கள். உங்களுடன் உரையாடிய தருணம் மகிழ்ச்சியானது. படக் குழுவினருக்கு வழங்கிய உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here