எப்போது ஹோம்லி லுக்கில் காணப்படும் நடிகை பிரியங்கா மோகன் திடீரென வெளியிட்ட அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என கூறி கமெண்ட்டுகளை பவிட்டு வருகின்றனர்.

தொடர் வெற்றி

தமிழில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த டாக்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. மேலும், பிரியங்கா மோகனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதைதொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார் பிரியங்கா. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்தார்.

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை பிரியங்கா மோகன். எப்பொழுதும் கவர்ச்சி இல்லாமல், தனது ஹோம்லி லுக்கை வைத்தே ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சமூக வலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் கூட கவர்ச்சி இல்லாமல் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் ஷாக்

கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக வித்தியாசமான உடையில் பிரியங்கா மோகன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி பலரின் கவனம் ஈர்த்து வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள், நமக்கு இந்த கவர்ச்சி எல்லாம் ஒத்து வராது. நீங்கள் நேச்சுரல் பியூட்டி என்றெல்லாம் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர். பிரியங்கா மோகன் தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here