உழவன் பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நடிகர் கார்த்தி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில்; மக்கள் அனைவரும் விவசாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும். விவசாயிகளை பற்றியும் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் யோசிக்க வேண்டும். அதனால் தான் அவர்களை இங்கே வரவழைத்து மரியாதை செய்து அடையாளப்படுத்துகிறோம். நெல் மட்டும் இல்லாமல் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான தேவைகளை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஜீன்ஸ், வாட்ச் வாங்க போகும் போது விலை கேட்காமல் வாங்கும் நாம், கீரை கட்டு வாங்க பேரம் பேசுறோம். இது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விவசாயிகளின் நலனை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here