ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

ஆக்ஷம் படம்

ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யாஷ் ராஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாதனை

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே ‘பதான்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.57 கோடியை வசூலித்துள்ளது. ஹிந்தியில் மட்டும் ரூ.55 கோடியும், உலகளவில் ரூ. 100 கோடியும் வசூலை குவித்துள்ளது. இதன்மூலம் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையை ‘பதான்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here