வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (டிச.,12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை

நாளை (டிச.,13) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம் (டிச.,14) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.,15 மற்றும் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பரவலாக மழை

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருவள்ளூர் தலா 9 செ.மீ, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 8 செ.மீ, விருதாச்சலம் (கடலூர்), கோமுகி அணை (கள்ளக்குறிச்சி), வீரகனூர் (சேலம்), மரக்காணம் (விழுப்புரம்), பாலக்கோடு (தருமபுரி) தலா 7 செ.மீ, காஞ்சிபுரம், ஜெயம்கொண்டம் (அரியலூர்), வால்பாறை (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 6 செ.மீ, மயிலாடுதுறை, சின்கோனா (கோயம்புத்தூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சோலையாறு (கோயம்புத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), கொடவாசல் (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), திரூர் அக்ரோ (திருவள்ளூர்) தலா 5 செ.மீ, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), பொன்னனியாறு அணை (திருச்சி), அம்பத்தூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), தாம்பரம் தலா 4 செ.மீ, நீடாமங்கலம் (திருவாரூர்), செய்யூர் (செங்கல்பட்டு), தருமபுரி, செம்பரபாக்கம், செங்கல்பட்டு, கோத்தகிரி (நீலகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பூண்டி, சூளகிரி (கிருஷ்ணகிரி), விழுப்புரம், குப்பநத்தம் (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்), பாப்பாரப்பட்டி (தருமபுரி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

டிச.,12 முதல் டிச.,13 வரை லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். டிச.,14-ம் தேதி லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமன கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here