இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். அப்போது சிலர் கேக் வெட்டி ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடினர். ரசிகர்களை சந்திக்கத் நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டும் இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முதல்வர் வாழ்த்து

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here