குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன.

கொண்டாட்டத்தில் பாஜக

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் அம்மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர்.

காங்கிரஸ் மும்முரம்

அதேபோல், இமாச்சலில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 26 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதேபோல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று ஆர்வத்துடன் காங்கிரஸ் இருக்கிறது. ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என கருதும் காங்கிரஸ், தேர்தல் வெற்றி பெறும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here