பீகார் அருகே ஒரு இளைஞருக்காக 5 இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் மன்னன்

பீகாரின் சோன்பூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர். காதல் மன்னான அவர், ஒரே நேரத்தில் பல பெண்களை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் ஒருவரை காதலிப்பது இன்னொருவருக்கு தெரியாதவாறு படு சீக்ரெட்டாக மெயிண்டெயின் செய்து வந்துள்ளார்.

குடுமிபிடி சண்டை

இந்த நிலையில், அந்த ஊரில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு தனது காதலியுடன் சென்றுள்ளார் அந்த காதல் மன்னன். இவர்கள் ஜோடியாக நடந்து செல்வதை பார்த்த மற்றொரு காதலி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்றாவது காதலி அதை பார்த்துவிட்டார். பின்னர் அவர் சண்டை போடத் தொடங்கிய சிறிது நேரத்தில், காதல் மன்னனின் 5 காதலிகளும் “அவன் எனக்குத்தான்” என தலை முடியை பிடித்து சண்டை போட்டனர். இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள், நமக்கு எதுக்குடா வம்பு என நினைத்து வழக்கம் போல் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here