தெலுங்கில் உருவாகியுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று காலை வெளியான நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

“வாரிசு”

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் நேரடியாக வெளியாக உள்ளது.

பாடல் வைரல்

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ தமிழ் பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் இதுவரை 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று (நவ.,30) காலை வெளியானது. அனுராக் குல்கரனி மற்றும் எம்.எம்.மானசி இணைந்து பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here