தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருக்கும் சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-ம் ஆண்டிலிருந்து சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள நடிகை ஜெயலட்சுமி, தான் சினேகம் என்ற பெயரில் முறையான ஆவணங்களுடன் அறக்கட்டளை நடத்தி வருவதாக கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை தவறாக சித்தரிக்கும் விதமாக சினேகன் பேசியுள்ளதாக குறிப்பிட்டார். சினேகன் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், அப்படி அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here