ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

டை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு பூஜை

16-ம் தேதி மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷ பூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. இந்த 5 நாட்களிலும் நெய் அபிஷேகம் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.

ஆன்லைன் முன்பதிவு

பின்னர் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 14-ம் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படுகிறது. ஆடி மாத பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here