லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார்

சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல தென்னிந்திய மொழிப் படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று உச்ச நட்சத்திர நடிகையாக மாறியிருக்கிறார். 

தொட்டதெல்லாம் ஹிட்

சமீபத்தில் வெள்ளித்திரையில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் காணப்பட்ட நடிகை நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடினர். பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் மத்தியில் இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது. அடுத்து இவரது நடிப்பில் OTTயில் ‘O2’ படம் வெளியானது. தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படம் 2023-ல் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதனையடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘இறைவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

75-வது படம்

திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்து நடிக்க உள்ள 75-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது இந்தப் படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here