வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளதாக அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here