கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக உயிரிழக்கும் நிலை உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தகவல்

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், 74.11 சதவீதம் பேர் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பூஸ்டர் டோஸ்

சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாகவும் கூறினார். 1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும் அதில் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here