தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு கடந்த 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ஊரடங்கு

இந்நிலையில், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 16ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு நாளில், கடந்த 16ம் தேதி முழு ஊரடங்கின்போது நடைமுறைபடுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும்.

அனுமதி – தடை

வெளியூரில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ்நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும். வாடகை கார்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here