டுவிட்டரில் தான் வெளியிட்ட கருத்துக்கு பிரபல திரைப்பட நடிகர் சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு

நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார். இது கண்டத்திற்குள்ளானது. பெண் என்றும் பாராமல் சாய்னா நேவாலை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போலீசிலில் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது.

ன்னித்துவிடுங்கள்

இந்த நிலையில், தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கோரியுள்ளார். இதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தனது நகைச்சுவை தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும், தனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார். தான் நகைச்சுவயாக சொன்ன விஷயத்தில் உள்நோக்கம் எதிவும் இல்லை என்றும் பாலினம் பற்றி தான் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கூறியிருக்கிறார். பெண்ணியம் பேசுபவர்களுக்கு தான் எப்போது துணை நிற்பவன் எனக் குறிப்பிட்டுள்ள சித்தார்த், நீங்கள் எப்போதும் தனது சாம்பியனாகவே இருப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரெண்டிங் ஆனது ஏன்?

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தன்னைப்பற்றி கூறிய கருத்து ஏன் வைரலானது என தெரியவில்லை என்று பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். அவர் (நடிகர் சித்தார்த்) முதலில் தன்னைப்பற்றி சில கருத்து தெரிவித்துள்ளார். அதன்பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார். அது இவ்வளவு வைரலானது ஏன்? என தனக்கு தெரியவில்லை என்றும் டுவிட்டரில் தான் டிரெண்டிங் ஆனது தனக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் சாய்னா நேவால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here