ஜீவா நடிக்கும் புதிய படத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை மாளவிகா மீண்டும் திரைப்பட்டத்தில் நடிக்க உள்ளார்.

மாளவிகா

தமிழில் ‘உன்னைத்தேடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. முதல் படத்திலேயே அஜித்திற்கு ஜோடியாக நடித்த அவர், பிறகு ரோஜாவனம், கந்தா கடம்பா கதிர்வேலா, வெற்றிக் கொடிகட்டு, லவ்லி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் மாளவிகா நடித்துள்ளார். கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடலில் மாளவிகாவின் நடனம் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.

மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா, கர்ப்பமான பிறகு சினிமாவை விட்டு விலகினார். 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீவா, சிவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாளவிகா ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்தேன். முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானேன். அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் ‘கோல்மால்’ பட வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது”. இவ்வாறு நடிகை மாளவிகா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here