நடிகை லட்சுமி மேனனின் நடனத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு நல்லா டான்ஸ் ஆட தெரியுமா என்று வாய்ப் பிளந்துள்ளனர்.

ரசிர்களிடம் வரவேற்பு

‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். முதல் படத்திலேயே தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிகப்பு மனிதன், வேதாளம் போன்ற படங்களிலும் நடித்தார். கவர்ச்சியான கதாபாத்திரங்களை விட இவருக்கு குடும்ப பாங்கான உடைகளும், கதைகளும் தான் செட் ஆனது. நல்ல படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனனின் மார்க்கெட் திடீரென்று சரிந்தது.

குவியும் பாராட்டு

மலையாள நடிகைகள் என்றாலே பாட்டுக்கும், நடனத்திற்கும் குறை வைக்க மாட்டார்கள். அந்த வகையில், லட்சுமிமேனனும், தான் நடனம் ஆடும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருவார். சில நாட்களுக்கு முன்பு அவர் நடனமாடி கீழே விழுந்த வீடியோ வைரலாக பரவியது. லாக்டவுன் சமயத்தில் உடற்பயிற்சிகள் செய்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென்று இருக்கும் லட்சுமி மேனன், நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அழகாக நடனம் ஆட தெரியுமா என்று அனைத்து ரசிகர்களும் வியந்து கேட்கும் அளவிற்கு, அவரது நடனம் வாய்பிளக்க வைத்துள்ளது. லட்சுமி மேனனின் நடன வீடியோவை பார்த்த ரசிகர்கள், எனக்கும் கொஞ்சம் டான்ஸ் ஆட சொல்லி தாங்க ப்ளீஸ் என்று கொஞ்சியும், கெஞ்சியும் கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ மூலம் மார்க்கெட் சரிந்த லட்சுமிமேனனுக்கு கண்டிப்பாக ஒரு ரீஎன்ட்ரி கிடைக்கும் என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here