சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

உயரும் விலை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் மீதான விலை சற்று குறைந்துகொண்டே வருகிறது.

தங்கம் விலை குறைவு

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 101 ரூபாயாகவும், சவரன் 40 ஆயிரத்து 808 ரூபாயாகவும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 566 ரூபாயாகவும், சவரன் 44 ஆயிரத்து 528 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 31 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், சவரன் 248 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 34 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 532 ரூபாயாகவும், சவரன் 272 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 256 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றம்

இதேபோல், வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி நேற்று 68 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 890 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here