ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்திக்கு அம்மாவாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘அண்ணாத்த’

”தர்பார்” படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ”அண்ணாத்த”. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘அண்ணாத்த்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ரமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 50% சதவீத படப்பிடிப்புகள் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை முற்றிலும் ஒழிந்த பின்னரே மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த ‘அண்ணாத்த’ படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர். படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால், பொங்கலை தவிர்த்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

கீர்த்திக்கு அம்மாவா நயன்?

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் முழு கதையும் லீக் ஆகிவிட்டது என ஒரு கதை தற்போது இணையத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. அதில் ரஜினியின் முறை பெண்களாக நடிக்கும் குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இவர்களின் போட்டியை கண்ட ரஜினி இருவர் மனதையும் காயப்படுத்த வேண்டாம் என்று நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை தான் கீர்த்தி சுரேஷ். இவர் திருமண வயதை எட்டிய பின், மீண்டும் இவர்கள் தங்கள் வீட்டுக்கு கீர்த்தி மருமகளாக வர வேண்டும் என்கிற ஆசையில் மோதுகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி தான் இந்த கதை நகர உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்

எனினும் இந்தப் படத்தில், கீர்த்திக்கு அம்மாவாக நயன்தாரா நடிக்கிறார் என்பதை தான் நயன் ரசிகர்களால் வார்த்தையால் கூட ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால் கதை யூகிப்பின் அடிப்படையில் மட்டுமே உலா வருவதால், இது வதந்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் மனதை தேற்றி கொண்டுள்ளனர் நயன்தாரா ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here