சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எப்போதும் நக்கல் தான்

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் 12ஆம் நூற்றாண்டு மன்னனாக சந்தானம் நடித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் படத்தை பற்றிய அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கிறது அப்படத்தின் டிரெய்லர். இதில் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் சில காட்சிகள் காமெடியாக மாற்றப்பட்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் வண்ணம் உள்ளது. சந்தானம் என்றாலே நக்கலான பேச்சுக்கும், எதார்த்தமான நடிப்புக்கும், குறைவே இருக்காது. அந்த வகையில், இந்த டிரெய்லர் அனைவரும் சிரிக்கும் வகையில் காமெடியாக அமைந்துள்ளது. அதனால் ‘பிஸ்கோத்’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சரியான கதை தேர்வு

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ் நடித்திருக்கிறார். கட்டப்பாவாக மொட்டை ராஜேந்திரனும், பாகுபலியாக சந்தானமும் காமெடி செய்கின்றனர். பாகுபலி படத்தில் 100 அடி உயர சிலையை வைப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கயிரை இழுப்பார்கள். அதே மாதிரி இப்படத்திலும் 100 அடி உயரமான கட்அவுட்டை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இழுக்கிறார்கள். 100 அடி கட்அவுட், பத்து உயிர்களை ஆவது பலி கேட்காதா என ஆனந்தராஜ் கேட்கும் வசனம் ‘பிஸ்கோத்’ படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. மக்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என கட்டப்பாவாக வரும் மொட்ட ராஜேந்திரன் கேட்க, அந்த சமயத்தில் அங்கு வந்த சந்தானம் கயிரை இழுக்க துவங்குகிறார். லொள்ளு சபா மனோகர் பாகுபலி என்று கத்த துவங்க மனோகர் கன்னத்தில் பளார் என்று அறை விடுகிறார் சந்தானம். மாஸ்க் போடாமல் வந்ததால் அவரை அறைந்துள்ளார் பாகுபலி சந்தானம். அதுபோல் பல படங்களின் காட்சிகளையும் சிறிது சிறிதாக ட்ரோல் செய்து டிரெய்லரை உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஹாலிவுட் பட காட்சிகளையும் ட்ரோல் செய்திருக்கிறார்கள். கமல்ஹாசன், ரஜினி என்று யாரையுமே விட்டு வைக்காமல் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.

திரையரங்குகளில் ரிலீஸ்

தென்னிந்தியாவில் 18ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜசிம்மன் என்ற ஒரு மன்னரின் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். ஆனால் அது தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதற்காக பாகுபலியை இப்படத்திற்கு பயன்படுத்தி இருக்கிறோம் என்று படத்தின் இயக்குநர் கூறியிருக்கிறார். இப்படத்தில் ராணிகளாக தாரா அலிஷா மற்றும் ஸ்வாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், லொள்ளு சபா மனோகர் என பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து இருக்கின்றனர். ‘பிஸ்கோத்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்க் ,சோசியல் டிஸ்டன்சிங், சானிடைசர் என முழு டிரெய்லரும் கலகலப்பாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here