ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைனில் பல சூதாட்டங்கள் இருந்தாலும், ‘ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு உண்டு. அதனை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால் இளைஞர்கள் எந்த நேரமும் ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதாகவும், பணம் விரயமாவதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன் போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும், வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என தூண்டப்படுவதால், இளைஞர்கள் அந்த விளையாட்டுகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும் பணத்தை துளைத்து நிதி நெருக்கடிக்கும் ஆளாவதால், உயிர் பலிகளும் ஏற்படுகின்றன.

டிஜிபியிடம் புகார்

இந்நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தின் விளம்பரத்தில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா அகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here