தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், அதனை வாங்க வேண்டுமென்ற நடுத்தர குடும்பத்தினரின் கனவு கனவாகவே இருந்து வருகிறது.

தொடரும் விலையேற்றம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. சென்னையில் இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 592 உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் (ஜூலை 27) இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,978 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று இதன் விலை ரூ. 4,904 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 74 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.39,232க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று 592 ரூபாய் உயர்ந்து ரூ.39,824க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஏறி வரும் தங்கத்தின் விலையை விட, இது மிகப்பெரிய விலை ஏற்றமாகும். ஆபரண தங்கத்தை போலவே, தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு நேற்று (ஜூலை 26) ரூ.5,148 லிருந்து ரூ.5,227 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை இன்று 632 ரூபாய் உயர்ந்து ரூ.41,816க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நேற்று ரூ. 41,184க்கு விற்பனை செய்யப்பட்டது.

மற்ற நகரங்களின் நிலவரம்

மும்பையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,991 ஆகவும், கேரளாவில் ரூ. 4,756 ஆகவும் உள்ளது. பெங்களூருவில் ரூ. 4,842 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,905 ஆகவும், டெல்லியில் ரூ.4976 ஆகவும் விற்கப்படுகிறது. ஓசூரில் ரூ.4,911 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,001ஆகவும், புதுச்சேரியில் ரூ.4,906 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் தாறுமாறாக அதிகரித்து உள்ளது. நேற்று ரூ. 66.90 ஆக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ.70.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி மொத்தத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு ஏறிக்கொண்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here