சோனியா அகர்வாலின் டுவீட்டை பார்த்த அவரது ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறீர்களா என கேள்வி கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

பிரபலங்களின் மறுமணம்

சினிமா பிரபலங்கள் பலர் மறுமணம் என்பதை சாதாரணமான விஷயமாகவே கருதுகின்றனர். சில முன்னணி நடிகர், நடிகைகளும் மறுமணம் செய்துள்ளனர். என்ன தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். சிலர் உடனே அடுத்த திருமணத்திற்கும் தயாராகி விடுகின்றனர். அந்த வரிசையில், நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

2வது திருமணம்?

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சோனியா அகர்வால், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவனை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்த அவர்கள், அதற்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் சோனியா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ல் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டார். சில நாட்கள் இதனை நெட்டிசன்கள் கேலி பேசி வந்தனர். ஆனால் அதை ஏதும் கண்டுகொள்ளாத சோனியா அகர்வால், திரைப்படங்களில் குணசித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இதனிடையே, சோனியா அகர்வால் வெளியிட்ட டுவிட்டர் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகினர். ‘இன்னும் மூன்று நாட்களில்’ எனக் குறிப்பிட்டு ஒரு திருமண போட்டோவையும் பதிவிட்டுள்ளதுதான் அதற்கு காரணம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாரோ? என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஏதாவது படத்தின் போஸ்டர் வெளியீடா? என்றும் குழம்பிப் போயுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து தான் அதற்கான உண்மை வெளிவரும்.

முன்னாள் கணவருக்கு நன்றி

சமீபத்தில் காதல் கொண்டேன் படத்தின் வெற்றிக்காக அவரது முன்னாள் கணவரும், இயக்குநருமான செல்வராகவனுக்கும், அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் மற்றும் தனுஷுக்கும் சோனியா அகர்வால் நன்றி கூறி பதிவிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள சோனியா, திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடிக்கத் துவங்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘காட் ஃபாதர்’ வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிஸில் டேனியல் பாலாஜி நடித்த கதாபாத்திரத்தை பார்த்து அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அவர் பேசிய வசனங்களும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டது. இதனால் அந்த வெப் சீரிஸை வெளியிடக்கூடாது என்று பலர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here