தன்னையும், நடிகர் அஜித்தைப் பற்றியும் எப்படி தப்பாக பேசலாம் என்று பிரபல பைக் ரேஸர் அலிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

சகலகலா வல்லவர்

நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் ‘தல’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது வரை அசைக்க முடியாத நபராக திகழ்ந்து வருகிறார் அஜித். தன்னம்பிக்கையின் சிகரம் ‘தல’ அஜித் தான். சினிமா ஒருபக்கம், பைக் ரேஸ் ஒரு பக்கம் என நாணயத்தை போல இரு பக்கங்களாக திகழ்ந்து வருகிறார். ஒரு மெக்கானிக்காக இருந்து சினிமா மற்றும் பைக் ரேஸ் என இரண்டிலும் அஜித் எப்போதும் ‘தல’ தான். சில காலங்களாக அஜித்தால் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ்களில் பங்கேற்க முடியவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் அளிக்கிறது. திரைப்படங்களில் அவர் கார் மற்றும் பைக் ஒட்டும் காட்சிகள் வந்தால் போதும், ரசிகர்களின் விசில் சத்தம் வின்னையே பிளக்கும் அளவில் இருக்கும்.

சர்ச்சை கருத்து

பிரபல பெண் பைக் ரேஸரான அலிஷாவுக்கு, பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்துகொள்ளும் தல அஜித்துடன் நல்ல நட்பு இருந்து வருகிறது. மேலும் 2014 ஆம் ஆண்டு யுவராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ‘இரும்பு குதிரை’ படத்தில் பைக் ரேஸர் ஆக வலம் வருவார் அலிஷா. அதன்பின் விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்திலும் அலிஷா நடித்துள்ளார். சமீபத்தில் அலிஷாவிற்கு தேசிய மனித உரிமை குற்ற மற்றும் ஊழல் தடுப்பு பணியக்கத்தின் தமிழ்நாடு மாநில பெண்கள் தலைவர் பதவி வழங்கப்பட்டது. நடிகர் அஜித்தால் தான் அலிஷாவிற்கு இந்த பதவி கிடைத்ததாக ஒரு தகவல் வெளியானது. மேலும் இந்த பதவி கிடைத்தமைக்காக அஜித் வீட்டிற்கு சென்று அவரது காலில் அலிஷா விழுந்து நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அலிஷா, இந்த செய்தி முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல் என்று கூறியுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற செயல்களை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here