விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக செய்திகள் உலா வரும் நிலையில், அந்தப் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க பிரபல நடிகர் மோகனை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

80களின் ராஜா

1980களில் கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் என்றால் அது மோகன் தான். அவர் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட் ஆகின. இயக்குநர் பாலு மகேந்திராவால் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் தான் மைக் மோகன் என்கிற மோகன் ராவ். 175 நாட்கள் ஓடிய தனது முதல் படத்திலேயே அவர் வெள்ளி விழா கொண்டாடினார். இதன்பின் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்க துவங்கினார். இவருக்கு தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் மூடுபனி. அக்காலத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரைப்படங்களுக்கு நிகராக இவரது திரைப்படம் இருந்தது.

வெள்ளி விழா நாயகன்

மோகன் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெள்ளி விழா கொண்டாடின. இதனாலே இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயரும் வந்தது. தமிழில் இவர் நடித்த “நெஞ்சத்தை கிள்ளாதே” திரைப்படம் 365 ஓடின. பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் 500 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கி மோகன் ரேவதி நடித்து பெரும் வெற்றிபெற்ற மௌன ராகம் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்ததுள்ளது. மோகன் திரைப்பயணத்தில் உச்சம் தொட்டதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜா. இவர் மோகனுக்காக அமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே ஈசியாக கொண்டுபோய் சேர்த்தது. 1990க்கு பிறகு இவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது ரசிகர்களின் கேள்வியாகவே இருந்தன.

அப்பாவா, நோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படும் படத்தில், விஜய்க்கு அப்பாவாக மோகனை நடிக்க வைக்க அணுகியதாக தெரிகிறது. இதற்கு அவரோ விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் அளவிற்கு எனக்கு ஒன்றும் வயதாகவில்லை, வேறு ஆளை பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அனுகியதாகவும், அதற்கும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மோகன் மட்டும் விஜய் படத்தில் நடிக்க ஒகே சொல்லிட்டால், அடுத்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதே சினிமா பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here