சூர்யாவையும், ஜோதிகாவையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்க ஒரு கதை தயார் செய்யப் போவதாக இயக்குநர் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.

நிஜத்திலும் இணைந்த ஜோடி

திரையில் ஜோடியாக நடித்து அதன்பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானவர்கள் சூர்யா – ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் இவர்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்தனர். அப்போது நண்பர்களாக பழகி, பின்னர் காதலாக மாறியதையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது பலரும் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் ஜந்து முதல் ஆறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்டிரி உள்ளது. நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வரும்போது பலரும் அதனை பார்த்து வியந்துள்ளனர்.

மீண்டும் திரையில் இணையும் ஜோடி!

திருமணத்திற்கு பிறகு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பின்னர் “36 வயதினிலே” படத்தின் மூலம் ரீஎன்டிரி கொடுத்தார். அதனைதொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவமான படங்களில் அதிகம் நடிக்கத் துவங்கினார். ஜோதிகா நடிப்பில் கடைசியாக பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியானது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியானது. திருமணத்திற்கு பின் ஜோதிகா நடிக்க வந்தாலும், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. இயக்குநர் ஹலிதா ஷமீம், இவர்கள் இருவரையும் இணைத்து நடிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சூர்யா – ஜோதிகாவுக்காக நிச்சயம் ஒரு கதையை உருவாக்குவேன் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சில்லுக்கருப்பட்டி இப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்கினார். இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்தது.

அடுத்தடுத்த படங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம், ஜோதிகா படத்தை போல OTTயில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு, இப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று கூறியுள்ளது. இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைக்க உள்ள சூர்யா, அப்படத்திற்கு பிறகு வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கின்றார். இவை அனைத்தும் முடிந்த பிறகு ஹலிதா ஷமீம் கதை உருவானால் அதில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here