தயாரிப்பு நிறுவனத்தின் நெருக்கடி காரணமாக இந்தியன் 2 படத்தில் இருந்து இயக்குநர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன்

கடந்த 1996ம் ஆண்டு வெளியானது ‘இந்தியன்’ திரைப்படம். சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், லஞ்சத்திற்கு எதிராக தனிநபர் போராட்டத்தை நடத்துவதுதான் இந்தியன் படத்தின் கதை. மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், காவேரி, சுகன்யா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 70 வயது முதியவர், அவருடைய மகன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் கலக்கி இருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்போதே இந்த படத்தில் லஞ்சம், அரசியல் என்று பேசப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்தியன் படத்தி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதும், இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதும், இது கண்டிப்பாக கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கைக்கு அடுத்த கட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தடை மேல் தடை

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘இந்தியன்2” படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கும் முன்னரே டிராப் ஆனதாக ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால், பல தடைகளை தாண்டி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. திடீரென படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து காரணமாக மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

ஷங்கர் விலகல்?

இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்றும் பட்ஜெட்டை பாதியாக குறைக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த, டைரக்டர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் “இந்தியன் 2” படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி பல வதந்திகள் வந்தாலும் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடமிருந்து வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here