வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் அவற்றில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் வரவேற்பு

சமீபகாலமாக மக்கள் மத்தியில் வெப்சீரிஸ்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன் ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர். அதேபோல் சத்யராஜ், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கின்றனர். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களுக்கு மாறி வருகின்றனர்.

வெப் சீரிஸில் சூர்யா?

பல நடிகர், நடிகைகள் வெப்சீரிஸ்களுக்கு மாரி வரும் வேலையில், நடிகர் சூர்யாவும் முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ் தயாரிப்பதும் அதிகரித்து வருவதால், சினிமா இயக்குநர்கள் பலர் வெப்சீரிஸ் இயக்குவதில் பிசியாகிவிட்டனர். இயக்குநர் மணிரத்னமும் வெப்சீரிஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளார். 9 பகுதிகளாக இந்த வெப்சீரிஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வெப்சீரிஸில் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது. மற்ற 8 பகுதிகளை 8 இயக்குநர்கள் தனித்தனியே இயக்க உள்ளனர். அரவிந்த் சாமி, சித்தார்த் ஆகியோரும் ஒவ்வொரு பகுதிகளை இயக்க உள்ளது கூறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here