தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் தான் திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த பல்வேறு எதிர்பாப்புகளை கூறியுள்ளார்.

மாடல் ரகுல்

மாடலிங் என்ற துறை சினிமாவிற்குள் நுழைய ஒரு பாலமாக இருக்கிறது. மாடலிங் செய்த பலர் தற்போது ஹீரோயின்களாக ஜொலிக்கின்றனர். அந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். கல்லூரிப் பருவத்தில் இருந்தே மாடலிங் துறையில் இருந்து வந்த ரகுலுக்கு, சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. பின்னர் பெரும் போராட்டத்திற்கு பின் கன்னட திரையுலகில் கால் பதித்தார். தமிழில் செல்வராகவன் இயக்கிய 7/ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான கில்லியில் நடித்தார் ரகுல் பிரீத் சிங். பின் படிப்படியாக பல மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் ஆளுமை

தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த ரகுல், சுமார் நான்கு முதல் ஜந்து ஆண்டுகளில் 13 படங்கள் நடித்தார். முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரன் மற்றும் மகேஷ் பாபு என அனைவருடனும் ஜோடி சேர்ந்து தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். தமிழ் சினிமா பக்கம் வந்த அவர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அவரது அண்ணன் சூர்யாவுடன் என்ஜிகே போன்ற படங்களில் நடித்தார். தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் என வரிசையாக நடித்துக்கொண்டு வருகிறார்.

ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்

இந்த நிலையில், தனக்கு எப்படிபட்ட கனவர் கிடைக்க வேண்டும் என்று சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். இதுதொடர்பாக அவர் பேசுகையில்; ஒரு மனிதனின் வாழ்க்கையில் காதலும், திருமணமும் கட்டாயம் இருக்க வேண்டும். இரண்டுமே இனிமையானவை மற்றும் மென்மையானவையும் கூட. இந்த இரண்டும் என் வாழ்க்கையில் வரும். அதை நான் மகிழ்ச்சியாக அனுபவிப்பேன். என்னை மணப்பவருக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவர் கண்டிப்பாக உயரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரின் முகம் பார்த்து பேச முடியும். தனது வாழ்க்கையில் ஏதாவது லட்சியம் கொண்டவராக இருக்க வேண்டும். நான் தொடர்ந்து நடிப்பதை அனுமதிக்கபடுபவராக இருக்க வேண்டும். நான் கடைசி வரை நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நடிக்க தான் பல கஷ்டங்களை தாண்டி வந்தேன். அதனை ஒருபோதும் கைவிட மாட்டேன். இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த ரகுலின் ரசிகர்கள், உங்களுக்கு ஏற்ற ஆண் மகனை நாங்கள் தேடி தருகிறோம் என்று கூறி வருகின்றனர். ரசிகர்கள் இருக்கும் ஆர்வத்தை பார்த்தால் கூடிய சீக்கிரமாக ரகுலுக்கு டும் டும் டும் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here