இந்தியா முழுவதும் இன்றும், நாளையும் வானில் தெரியும் வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

வானில் நிகழும் அதிசயம்

வானில் அவ்வபோது பலவிதமான அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். வாழ்க்கையில் மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால் நட்சத்திரம். வால் நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசி ஆகியவற்றின் அண்ட பனிப்பந்துகள் ஆகும். இதனை தற்போது இந்திய மக்கள் காணலாம் என நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இன்றும், நாளையும் வானில் வால் நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. Comet C/2020 F3 (NEOWISE) என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரத்தை, இந்தியாவில் வெறும் கண்களால் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் இந்த வால் நட்சத்திரம் தெரிய உள்ளது.

வால் நட்சத்திரம்

பூமிக்கு அருகில் பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை குறிக்கும் வகையில், இதற்கு நியோவைஸ் என பெயரிட்டுள்ளதாக நாசா கூறுகிறது. முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் கடந்த 8ம் தேதி சூரியன் மறைந்த பின்னர் மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது. இந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. அதேபோல் அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து பகுதிகளிலும் தெரிந்துள்ளது. கடந்த மார்ச் 27ம் தேதி நாசாவின் எக்ஸ்போரர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்ட இந்த வால் நட்சத்திரம், கடந்த 3ம் தேதி சூரியனுக்கு அருகில் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து சென்றது. இது சூரியனுக்கும், புதன் கோளுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட குறைவானதாகும். வால் நட்சத்திரமானது அதன் நீளமான சுற்றுப்பாதையை முடிக்க, சுமார் 6800 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது என்பது குறுப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here