பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளிவரும் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் என்ற மாயஜாலகாரன்

சினிமாத்துறையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பது பாலிவுட் திரையுலகம் தான். அந்த பாலிவுட்டில் பல கான்களும், பல கப்பூர்களும் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதில் தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் நடனம் என பல திறமையை வெளிப்படுத்தி ஒரு ஹீரோவாக வலம் வந்தவர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். சின்னத்திரையில் ஜொலித்த சுஷாந்த் சிங் தனது கடும் உழைப்பால் வெளித்திரையில் தோன்றினார். தொடக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அந்தப் படத்தில் சுஷாந்த் தோனியாக நடித்தார் என்று கூறுவதை விட தோனியாகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் இவருக்கு கணகச்சிதமாக பொருந்தியது.

உலகை உலுக்கிய மரணம்

ஒரு முன்னனி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி  மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி சினிமா வட்டாரம் மட்டுமின்றி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுஷாந்த் மரணத்திற்கு சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக சுஷாந்தின் ரசிகர்கள் பல போராட்டங்களையும் நடத்தினர். இதனிடையே, சுஷாந்த் சிங் உயிரிழந்து ஒரு மாதம் முடியவுள்ள தருவாயில், அவரது மரணத்தை சிபிஜ விசாரணை செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் முழுமையான உண்மை வெளிவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கேட்கும் ரசிகர்கள்

சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு பக்கம் இருக்க, சுஷாந்த் ரசிகர்களும் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் பல கருத்துக்களை பதிவு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அவரை நினைவு கூறும் வகையில் பலவகையான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சுஷாந்தின் கடைசி படமான ‘தில் பெச்சாரா’ படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்களும், சுஷாந்தின் குடும்பத்தாரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அப்படம் OTTயில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் “தில் பெச்சாரா” பட டிரெய்லர் அனைத்து டிரெய்லர்கள் சாதனைகளையும் முறியடித்து வெற்றி அடைந்ததைப் போல், இப்படமும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here