மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

8 போலீசார் கொலை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கடந்த 3ம் தேதி பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லபட்டனர். இந்த சம்பவத்தின் போது தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேச மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீசாரின் பிடி இருகவே விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே தலைமறைவாக இருந்தான்.

என்கவுண்டர்

விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் சென்றபோது போலீசார் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் உத்தரபிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தரபிரதேச அதிரடிப்படை போலீசார் இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர். அப்போது கான்பூரை நெருங்கும் நேரத்தில் அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவனை போலீசார் சுட்டதில், சம்பவ இடத்திலேயே விகாஸ் துபே உயிரிழந்தான். 

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here