இளம் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தில் 50 சதவீதத்தை அதிரடியாக குறைத்துள்ளதால் மற்ற நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

சம்பளம் குறைப்பு

சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படம் பெரிய அளவில் பிரம்மாண்டமாக இயக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் ரெமோ, சீமராஜா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்ததால், அயலான் படத்தை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று படக்குழு போராடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பலர் வருமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெருமளவு பின்னடைவை சந்தித்துள்ளதால் நடிகர், நடிகைகள் பலர் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வேன் என்று கூறியதற்கு பிறகு பல நடிகர், நடிகைகளும் அந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த வகையில் தனது சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெரும் ரகுல், இனி 75 லட்சம் ரூபாய் மட்டும் சம்பளமாக பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கில் உடற்பயிற்சி

ரகுல் ப்ரீத் சிங் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் செய்யும் யோகாவும், உடற்பயிற்சியும் தான். அந்த அளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். எப்பொழுதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனமாக இருக்கும் ரகுல், இந்த ஊரடங்கு சமயத்தில் பல வகையான யோகக்களை செய்து அசத்துகிறார். அந்தப் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தமிழில், யுவன், தடையர தாக்க, என்னமோ ஏதோ போன்ற பல படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பெருமளவு இவருக்கு பெயர் பெற்று தந்தது. தற்போது அயலான் படம் மட்டுமல்லாமல் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் ரகுல் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here