பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டுவர உள்ளது.

முழு ஊரடங்கு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பு மூலம் புதிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று முதல் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தடை

தலைமைச் செயலகம் மூடப்பட்டதால், முதல்வரின் வீட்டிலேயே முதல்வரின் அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காது என்றும் அவசர, அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. மருந்துக் கடைகள், மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக திருவனந்தபுரம் மாநகராட்சி இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here