தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகள் பலர் பாவாடை தாவணியில் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

கவர்ச்சியை விரும்பும் நடிகைகள்

நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக உடை அணிவதையே பெரும்பாலும் விரும்பி வருகின்றனர். தங்கள் ரசிகர்களுக்கு அதுவே பிடித்து இருக்கிறது என்பது போன்ற காரணங்களைச் சொன்னாலும், கவர்ச்சிக்கு எப்பொழுதும் நடிகைகள் பஞ்சம் வைப்பதே இல்லை. ரசிகர்கள் கவர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்களோ, அதே அளவிற்கு டிரெடிஷனல் ஆக இருக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நடிகைகள் பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் வந்தாலும், படங்களில் கவர்ச்சியை கொஞ்சம் அழகாகவும், அளவாகவும் கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் புடவை, பாவாடை தாவணி அணிந்த நடிகைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர். தமிழில் பாவாடை தாவணி, புடவையில் வரும் நடிகைகள் எப்போதுமே அழகுதான். முன்னணி நடிகைகளாக இருக்கும் கதாநாயகிகள் பாவாடை தாவணியில் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பொறாமைப்படும் அளவிற்கு அவர்கள் அழகாக இருக்கின்றனர்.

தனி வசீகரம்

எந்த உடையிலும் இல்லாத அழகும் வசீகரமும் இந்த பாவாடை தாவணியில் இருக்கிறது. அதை உடுத்தியவுடன் வெட்கம் தானாகவே வரும். அதுதான் அந்த உடையின் தனி ஸ்பெஷல். அனைத்து முன்னணி நடிகைகளும் பாவாடை தாவணியில் அவ்வப்போது வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றனர். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா” என்று கவிஞர்கள் சும்மாவா பாடினார்கள். அதிலிருக்கும் அழகும், வசீகரமும் வேற எந்த உடையிலும் இருப்பதில்லை. அந்தவகையில் குட்டி குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகா பாவாடை தாவணியில் பெங்களூர் தக்காளி போலவே இருக்கிறார். பேண்ட் சர்ட் , ஸ்கட் போன்ற பல கவர்ச்சி உடைகள் இருந்தாலும் ஹன்சிகா பாவாடை தாவணியில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சப்பாத்தி மாவை பிசைந்து வைத்தது போல் இருக்கும் தமன்னாவுக்கும் பாவாடை தாவணி எடுப்பாகவே இருக்கிறது. பல கவர்ச்சியான உடைகளில் குத்தாட்டம் போடும் தமன்னா, பாவாடை தாவணியில் அனைத்து ரசிகர்களையும் வசீகரிக்கும் வண்ணமே இருக்கிறார்.

தாவணியில் தேவசேனா

எந்த ஒரு கேரக்டரை கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் நடிப்புத் திறன் உள்ளவர் தான் தேவசேனா என்று அழைக்கப்படும் அனுஷ்கா. மற்ற மாடர்ன் உடைகளில் இல்லாத அழகு இவரிடம் புடவையிலும், தாவணியிலும் இருக்கிறது. அண்ணாந்து பார்க்கும் உயரமும், அழகான தோற்றமும் உள்ள அனுஷ்கா, மற்ற எல்லா உடைகளையும்விட புடவையிலும், பாவாடை தாவணியிலும் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் புடவையில் வரும் அனைத்து படங்களுமே பெரும்பாலும் மெகா ஹிட் தான். சர்ச்சைக்கு பெயர் போன அமலாபால், புத்தகத்தை எடுத்து படிப்பது முதல் சாதாரண செல்பி எடுப்பது வரை அதில் உள்ள சில்மிஷத்தை வைத்து அவரை பலவகையாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் அவர்களுக்கு இடையே பலரது மனதையும் கொள்ளை கொண்டு இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ‘மைனா’ படம் முதல் ‘ஆடை’ படம் வரை அவர் நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. லேடி சூப்பர்ஸ்டார் என்று அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்படும் நயன்தாராவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பல வெற்றிகளை கொடுத்துள்ளார் .மாடர்ன் உடைகளில் வலம்வரும் நடிகைகள், குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தனது ரசிகர்களுக்கும் கதாநாயகிகள் அவ்வப்போது தாவணியில் விருந்து அளித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அந்தவகையில் காஜல் அகர்வால், த்ரிஷா போன்ற அனைத்து நடிகைகளும் தங்களது பாவாடை தாவணி புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here