உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிச.1ம் தேதி கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனாவால் 5,36,842 பேர் உயிரிழந்துள்ளனர். 1,15,50,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 15.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ரஷ்யாவில் இதுவரை 6.81 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 10,161 பேர் உயிரிழந்துள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 வாரங்களாக 4-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா, ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்துக்கு வந்துள்ளதாக சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் புள்ளி விவரங்களை திரட்டி வெளியிட்டு வரும் வேர்ல்டோ மீட்டர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 8,671 பேர் உயிரிழந்துள்ளனர். 2-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் இதுவரை 1,11,151 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 3வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 97,200 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்தடுத்த நாடுகள்

இதேபோன்று ரஷ்யா, பெரு, ஸ்பெயின், சிலி, பிரிட்டன், மெக்சிகோ, இத்தாலி, ஈரான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், கொலம்பியா, கனடா, கத்தார், பெல்ஜியம், நெதர்லாந்து, இந்தோனேஷியா‍, குவைத், சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here