கொரோனா பிரச்சனை காரணமாக பல திரைப்படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையன்று விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தீபாவளி எதிர்பார்ப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இன்றி சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற எல்லா பண்டிகைகளையும் விட தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்று. பண்டிகை நாட்களுக்கு ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் படங்கள் என்றால் அனைவரும் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பார்கள். அந்தவகையில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கும் படங்கள், தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மார்ச் மாதம் ரிலீசாக வேண்டிய விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா காரணத்தால் தள்ளிப்போனது. தீபாவளி அன்று வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. குழந்தைகள் மனதில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் மாஸ்டரின் குட்டி ஸ்டோரி பாடலை தியேட்டரில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சூர்யாவின் அருவா

இது ஒரு பக்கமிருக்க, நடிகர் சூர்யா நடித்த ‘அருவா’ என்ற படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்கள் என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில், விஜய் படத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சூர்யா நடித்த ‘அருவா’வை அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜோதிகா நடித்து வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTயில் ரிலீஸாகி பெரும் சர்ச்சையை சந்தித்த நிலையில், வசூல் ரீதியாக அப்படம் சரியாக போகவில்லை என்று பல தரப்பிலும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சூர்யாவின் சில படங்களை OTT வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஹிந்தி படம் சூர்யவன்ஷி

தமிழ் படங்கள் ஒரு பக்கமென்றால், ஹிந்தி படங்களும் இந்த போட்டியில் இறங்கியுள்ளது. ஹிந்தியில் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் ஏற்படுத்தும் என்பதில் என்ற சந்தேகமும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் ‘குட் நியூஸ்’ என்ற அவரது திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அக்ஷய்குமார் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம்தான் சூரியவன்ஷி. இந்த படமும் பெருமளவு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய்குமார் போலீஸாக நடிக்கும் இப்படத்தில், கத்ரீனா கைஃப், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுஷாந்த் சிங் மரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் கரண் ஜோகர் தயாரித்திருக்கும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று பல வகையிலும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அதனால் இப்படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும், தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று பல தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. தற்போதைக்கு தீபாவளி ரிலீசாக மாஸ்டர், அருவா, சூரியவன்ஷி ஆகிய படங்கள் லிஸ்டில் நிற்கிறது. அடுத்து எந்தப் படம் லிஸ்டில் சேரும் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here