உணவுகளில் எத்தனை வகைகள் இருந்தாலும் பிரியாணி எப்போதும் தனி ஸ்பெஷல் தான். பிரியாணி என்றால் உயிரையேவிடும் லிஸ்டில் தமிழ் ஹீரோயின்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

பிரியாணி

அனைவருக்கும் பிடித்த வேலை என்றால் அது சாப்பிடுவது மட்டும்தான். அதிலும் ருசியாகவும், காரசாரமாகவும் சாப்பிட வேண்டும் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சைனீஸ், தந்தூரி எனப் பல வகைகள் இருந்தாலும், பிரியாணி என்றால் ஒரு தனி மவுசு உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, எக் பிரியாணி என்று இருக்கும் பலவகையான பிரியாணிகளை ரசித்து ருசித்து சாப்பிடுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணை வேறேதும் இல்லை. எவ்வளவு சோகமாக இருந்தாலும், மன வருத்தத்தில் இருந்தாலும் நல்ல உணவு சாப்பிடுவதில் என்றுமே யாருமே பஞ்சம் வைப்பதில்லை. சிலர் கோபத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், பிரியாணி வாசனை வந்தால் அவர்கள் மனசு மாறிவிடும். சாலையில் நடந்து செல்லும்போது கூட பிரியாணி கடைகளை பார்த்தால், இன்று பிரியாணி சாப்பிடணும் போல இருக்கே என்று அனைவரின் மனதிலும் ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது. பல ஊர்களின் பெயர்களில் பிரியாணியை அடைமொழியாக வைத்து கூறுகிறார்கள் என்றால் அது சும்மாவா? அந்த ஊருக்கே ஸ்பெஷல் பிரியாணி தானே! திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி. திண்டுக்கல்லை பிடிக்குமோ பிடிக்காதோ, பிரியாணியை பிடிக்காதவர்கள் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகர்களின் பங்கு

நடிகர், நடிகைகள் இவ்வளவு ஸ்லிம்மாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்து இருக்கிறார்களே அது எப்படி சாத்தியம். டயட் இருந்தால் அவ்வளவு ஒல்லியாக இருக்க முடியுமா என நினைக்கும் பலர் நாமும் அதனை முயற்சி செய்தாக வேண்டும் என்ற கனவோடு, பல நாட்களாக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கட்டுப்பாடாக இருந்தாலும், பிரியாணியை கண்டால் இன்று ஒரு நாளைக்கு டயட்டை தள்ளிப்போட்டுவிடலாம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் வருகிறது. அந்தவகையில், நடிகர், நடிகைகளும் என்னதான் டயட் இருந்தாலும் பிரியாணி மேல் இருக்கும் மோகம் அவர்களையும் ஈர்த்துவிடுகிறது. நடிகர்கள் பிரியாணி சாப்பிடும் காட்சிகள் பெருமளவில் மெகா ஹிட் ஆனது என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு ராஜ்கிரன் பிரியாணி சாப்பிடுவதும், லெக் பீஸ்சை முழுசாக கடிப்பதும், நெப்போலியன் சாப்பிடுவதையும் தமிழ் சினிமாவில் எப்போதும் மறக்கவே முடியாது. சமீபத்தில் வெளிவந்த கைதி படத்திலும் கார்த்திக் பிரியாணி சாப்பிடுவது அனைவரையும் ஈர்த்தது. ஹீரோக்கள் மட்டும்தான் பிரியாணி சாப்பிடுவார்களா நாங்களும் சாப்பிடுவோம் என்று பல நடிகைகள் பிரியாணி சாப்பிடும் சீனுக்காக காத்திருக்கின்றனர். அந்தவகையில் முன்னணி நடிகைகள் யாருக்கெல்லாம் பிரியாணி பிடிக்கும் என்பதை விவரமாகக் காண்போம்.

ஹீரோயினும் பிரியாணியும்

நடிகர்கள் பலர் வீட்டிலும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பிரியாணி வகைகளை செய்து வீடியோவாக வெளியிட்டது பெருமளவு வைரலானது. சமீபத்தில் சிம்பு சிக்கன் செய்த வீடியோ வைரலாக பரவியது. தல அஜித், வெங்கட் பிரபு ஆகியோர் சூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணியை சமைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள் என்று பலவகையான செய்திகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. நடிகை ஜோதிகா, நயன்தாரா, பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நடிகைகளுக்கும் பிரியாணி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். ஜோதிகா அருள் படத்தில் பிரியாணியை மறைத்து வாங்கிக்கொண்டு போய், யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக சாப்பிடும் காட்சி இடம்பெற்றிருக்கும். இது அவர் பிடித்து நடித்த காட்சியாம். ஜோதிகாவிற்கு பிரியாணி என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ஹைதராபாத் தம் பிரியாணி என்றால் ஒரு கட்டு கட்டிவிடுவாராம். இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ், பிரியாணி மட்டும்தான் பிடிக்குமா? இல்லை இன்னும் இரண்டு இட்லிக்கு நல்லெண்ணெய் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? என்று கேலி செய்து வருகின்றனர்.

பிரியாணி தான் பெஸ்ட்

மிகவும் ஒல்லியாக ஸ்லிம்மான இடையை கொண்டுள்ள தமன்னாவுக்கு பிரியாணி என்றால் ரொம்பப் பிரியம். அவரைப் பார்த்தால் அப்படி தெரியவே இல்லையே என்று பலருக்கும் தோன்றும். ஆனால் எவ்வளவு பிரியாணி கொடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு, யோகா, உடற்பயிற்சி செய்து தன்னை கண்ட்ரோலாக வைத்துக் கொள்கிறார் நடிகை தமன்னா. எப்போதும் டயட்டில் இருக்கும் இவர், பிரியாணியை பார்த்தால் அதையெல்லாம் விட்டுவிட்டு, எங்கெல்லாம் வகைவகையாக பிரியாணி கிடைக்கிறதோ அதை எல்லாம் வாங்கி ருசித்து விடுவாராம். நடிகை காஜல் அகர்வாலுக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என அவரும் பல நேரங்களில் கூறி இருக்கிறார். சும்மா பிரியாணி என்று சொன்னாலே பிரியாணியா எங்கே என்று கேட்டுவிடுவாராம் காஜல் அகர்வால். அந்தளவுக்கு பிரியாணி மேல் காதல். சைவத்தை விட அசைவம்தான் காஜலுக்கு ரொம்பவும் பிடிக்கும். முகமூடி படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் குழந்தைகள் முதல் டேவிட் வார்னர் வரை அனைவரையும் கவர்ந்தவர் அவர். வீட்டில் எப்போதெல்லாம் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அவர் சமைக்கும் முதல் ஐட்டம் சிக்கன் பிரியாணி தான். வெளியே சென்றாலும் முதலில் ஆர்டர் செய்வதும் பிரியாணி தான்.

வெளுத்து வாங்கும் நயன்தாரா

நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்பொழுதும் பிரியாணியை வெளுத்து வாங்கி விடுவாராம். பிரியாணி சாப்பிடும் போது மற்றவர்கள் பேசினால் கூட, அமைதியாக இருங்கள் சாப்பிட்டுவிட்டு பேசலாம் என்று கூறி, முதலில் பிரியாணியை காலி செய்து விடுவாராம். சைனீஸ், தந்தூரி போன்ற பலவகை உணவுகள் இருந்தாலும், இவருக்கு பிடித்தது பிரியாணிதான். பிரியாணி மீது கொள்ளைப் பிரியம் வைத்துள்ள நமது ஹீரோயின்கள் அதனை சாப்பிட்டுவிட்டு, யோகாவையும் உடற்பயிற்சியையும் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here