தேவையானவை

மட்டன் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 200 கிராம்

தேங்காய் – 1/4 பங்கு

சோம்பு – 1 சிட்டிகை

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 4 பல்

மிளகாய் தூள் – 1 சிட்டிகை

மல்லித்தூள் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1/4 சிட்டிகை

எண்ணெய் (ரீபைண்ட் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய்) – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து விடவும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவை ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின், சூடு தன்மை குறைந்தவுடன் மிக்ஸியில் அரைத்து விடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளித்து விடவும். அதன்தொடர்ச்சியாக, நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் போன்றவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வேக வைத்த மட்டனை அதனுள் சேர்த்துவிட்டு, இறுதியாக தேங்காய் விழுதை அதனுடன் கலந்து கொஞ்சம் நேரம் கழித்து வறுவல் தன்மையாக மாறியதும் இறக்கி வைத்தால் சுவையான மட்டன் வறுவல் தயார்.

மட்டனின் பயன்கள்

மட்டனில் நல்ல கொழுப்புத் தன்மைகள் உள்ளன. கெட்ட கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. குழந்தைகளுக்கு வாரம் இருமுறை மட்டன் கொடுப்பதினால் மூளையின் செயல்பாட்டு தன்மை அதிகரிக்கச் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here