சினிமாவில் இருக்கும் கவர்ச்சி தனக்கு ஒத்துவராது எனவும் கவர்ச்சி இல்லாத அழகான உடைகளில் எப்போதும் நடிக்கத் தயார் என்றும் பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி கூறியிருக்கிறார்.
விஜய் படம் தான் என்ட்ரி
தளபதி விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதி, தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மாண்புமிகு மாணவன் படத்தை தொடர்ந்து ஜெர்ரி படத்தில் ஜித்தன் ரமேஷூடனும், காதல்.காம் படத்தில் பிரசன்னாவுடனும் நடித்துள்ளார். சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததாலும், கவர்ச்சி அதிகமாக எதிர்பார்ப்பது தனக்கு ஒத்துவராது என்பதாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் சீரியலில் நடிக்கத் தொடங்கினார் நடிகை ஸ்ருதி. இவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சீரியல்களை வயதான பாட்டிகளும், இல்லத்தரசிகளும் மட்டும்தான் பார்ப்பார்கள் என்ற காலம் மாறி, தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு இயக்குவதால், இளைஞர்களும் அதனைப் பார்த்து ரசிக்கத் தொடங்கி உள்ளனர்.
அனைத்தும் ஹிட்
நடிகை ஸ்ருதி நடிக்கும் அனைத்து சீரியல்களும் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்களையும் கவர்ந்து ஈர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இவரது எதார்த்தமான நடிப்பும், க்யூட்டான சிரிப்பும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘தென்றல்’ சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தை, இவரைவிட யாராலும் எதார்த்தமாகவும், நன்றாகவும் யாராலும் நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஸ்ருதி. சமூக வலைத்தளத்திலும் இந்த சீரியல் பெருமளவு பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவியையும் விட்டுவைக்கவில்லை நம் ஸ்ருதி. ஆபீஸ் என்ற சீரியல் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் பலரைத்த் தன் வசம் ஈர்த்துள்ளார்.
கவர்ச்சி இல்லாத மாடர்ன்
பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கும் ஸ்ருதி, நம் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதே பிளஸ் பாயிண்ட். அபூர்வராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் ஸ்ருதி நடித்து வந்தாலும், தற்போது ட்ரெண்டாக இருப்பது ‘அழகு’ சீரியல்தான். இந்த சீரியல் மூலம் ஆல்ரவுண்டர் ரசிகர்களையும் சேர்த்துள்ளார். பார்ப்பதற்கு எளிமையாகவும், அழகாகவும் இருக்கும் நடிகை ஸ்ருதிக்கு புடவை மட்டுமல்லாமல், மாடர்ன் உடைகளும் மிகவும் பிடிக்குமாம். பேண்ட் ஷர்ட், குர்தி , ஃப்ரீ ஹேர் போன்ற பலவகையான மாடன் உடைகளிலும், ஹேர் ஸ்டைல்களிலும் இவர் அவ்வப்போது தென்படுகிறார். கவர்ச்சி இல்லாத அழகான உடைகளுக்கு எப்போதும் நடிக்க தயார் என்கிறார் ஸ்ருதி. சமூகவலைத்தளங்களில் பல ரசிகர்களை கொண்டுள்ள இவர், அன்றாடம் பல பல அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களை பார்க்கும் அவரது ரசிகர்களும் லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் அள்ளி வீசுகின்றனர்.