தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டான ராஷ்மிக மந்தனா, அதில் சாய்பல்லவி நடிப்பதை அறிந்து திடீரென விலகியுள்ளார்.

விலகிய ராஷ்மிகா

தெலுங்கில் ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ வெற்றிக்கு பின் மீண்டும் நானி – சாய்பல்லவி வெற்றிக்கூட்டணி இணைகிறது. டாக்ஸி வாலா படத்தை இயக்கிய இயக்குநர் ராகுல் இயக்கும் இப்படத்திற்கு ‘ஷாம் சின்ஹா ராய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நானியுடன் சாய்பல்லவி இணைந்து நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சாய் பல்லவி நடிப்பதை அறிந்த ராஷ்மிகா, அப்படத்தில் இருந்து விலகி விட்டார். படத்தில் இரு ஹீரோயின்களுக்கும் சம வாய்ப்பு இருந்தாலும், ஹீரோக்களையே ஓவர்டேக் செய்யும் சாய்பல்லவி தன் கேரக்டரை எதுவும் இல்லாமல் செய்துவிடுவார் என்கிற பயமே ராஷ்மிகாவின் விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றி

பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, அப்படம் கொடுத்த அறிமுகம் பல மொழிகளில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி, மற்ற நடிகைகளை விட கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார்.

ரூ. 100 கோடி வசூல்

சாய் பல்லவி ராணாவுடன் இணைந்து நடித்து வரும் ‘விராட்ட பர்வம்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் நானியுடன் இரண்டாம் முறையாக மீண்டும் இணைகிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக வெளிவந்த மிடில் கிளாஸ் அப்பாயி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 100 கோடியை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டானது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் இப்பொழுது அதற்கான அப்டேட் வந்துள்ளது.

25வது படம்

மேலும் நானி நடிப்பில் வி மற்றும் டக் ஜெகதீஷ் என இரண்டு படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதில் நானியின் 25வது படமான வி படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த படத்தில் நானி முதன்முதலாக ஒரு டார்க் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற டார்க் கதாபாத்திரங்களில் நானி நடிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் டக் ஜெகதீஷ் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் இந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here