சினிமாவில் மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள பல நடிகைகள் பலவிதமான முயற்சிகளை செய்து வரும் நிலையில், நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சி எனும் ரூட்டை பிடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கொஞ்சம் ஹிட், நிறைய சொதப்பல்

சமூக வலைதளங்களில் பிசியாக இருந்து வரும் பல நடிகைகளில் பூனம் பஜ்வாவும் ஒருவர். சமீப காலமாகவே கண்ணைக்கவரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் பூனம். ‘மொடாட்டி’ எனும் தெலுங்கு படம் மூலம் சினிமா துறையில் கால் பதித்த பூனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் பல படங்களில் நடித்தாலும் திடீரென மார்க்கெட் சரிந்ததால் கவர்ச்சி நடிகையாக மாறி வருகிறார். சமீப காலமாகவே அவர் பதிவிடும் பதிவுகள் பெரும்பாலும் கவர்ச்சியாகவே இருக்கிறது. தனது மார்க்கெட்டை பிடிக்க பல நடிகைகள் கவர்ச்சி காட்டி வருவது போலவே இவரும் அந்த வழியில் டிரெண்டாக முயற்சி செய்து வருகிறார்.

இப்போதைக்கு டிரெண்ட்

த்ரோபேக் புகைப்படம் என்று பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் இந்த ‘தெனாவட்டு’ நடிகை. வெறும் சட்டை மட்டும் அணிந்து ஃபோஸ் கொடுப்பது இப்போது ட்ரெண்டாகி வந்திருக்கும் நிலையில், இவரும் பலப்பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட் தேடி வருகிறார். நடிகைகள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரிதளவு மெனக்கெடுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெரும்பாலான நடிகைகள் உடற்பயிற்சி செய்வதையும், யோகா செய்வதையும் தனது அன்றாட வேலையாக செய்து வருகின்றனர். அந்த வகையில் பூனம் பஜ்வாவும் முன்பு இருந்ததை விட இப்போது உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். உடற்பயிற்சி செய்து அந்த புகைப்படத்தை சமீபத்தில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் பார்ப்பவர்களை மிகவும் கிறங்கடிக்க செய்தது.

பல வகையான கமென்ட்ஸ்

36 வயது ஆகும் பூனம் பஜ்வா இப்படி கிளாமராக இருப்பது ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நீங்கள் பார்ப்பதற்கு காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிறீர்கள் என்றும் பல கமெண்ட்ஸ்களை குவிகின்றனர். அதிலும் சிலர் யாராச்சு இவங்ளுக்கு சான்ஸ் கொடுங்கப்பா தொல்லை தாங்க முடியல என்று காமெடியாகவும் நக்கலடித்தபடியும் கமென்ட்களை போட்டு வருகின்றனர். ஆனால் பூனம் பஜ்வாவின் ரசிகர்களோ இத்தனை வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறீர்கள் என்று பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here