வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் வனிதாவுக்குமான சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது.

மூன்றாவது திருமணம்

இன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாக இருப்பவர் வனிதா தான். அவர் நேற்று முன்தினம் மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வந்தது. அந்த திருமணத்திற்கு மகள்களும் துணை நிற்பதாக வனிதா கூறி வந்த நிலையில், புதிய அப்பா எங்கள் வீட்டிற்கு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது என அவரது மகள் ஜோவிதா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வர, நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்யத் தொடங்கினர்.

தொடரும் பிரச்சனை

திருமணம் முடிந்த உடனே வனிதாவின் மூன்றாவது வாழ்க்கையும் சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் அளித்த புகார்தான். தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அவர் புலம்பி வருகிறார். எலிசபெத் போலீசில் புகார் அளித்துள்ளதை பார்த்த சக நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரையா வனிதா திருமணம் செய்து கொண்டார் என்று பேசி வருகின்றனர். வனிதா விஜயகுமாருடைய திருமணம் ஒன்றா, இரண்டா, மூன்றா என்று அடுக்கிக் கொண்டே போனாலும், அதைப்பற்றிய விஷயங்களை பிரபலங்களும் ரசிகர்களும் தினம் தினம் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

கடும் கோபம்

இந்தியாவின் சட்ட திட்டங்கள், இந்தியாவின் குடும்ப ரீதியான கட்டமைப்புகள் இன்னும் பல காலங்களாக மாற்றப்படாமல் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க விவாகரத்து ஆகாமல் மறுமணம் என்பது உலகம் முழுவதும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. சட்டரீதியாக விவாகரத்து பெற்று விட்டால் ஆணும் பெண்ணும் மறுமணம் என்ற ஒரு விஷயத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றே கூறுகின்றனர். வனிதா விஜயகுமாரின் புதிய கணவர் பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி கொடுத்திருக்கும் புகார்கள் அனைத்தையும் பிரபலங்கள் பலர் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பெண் உரிமை, பெமினிசம், பெண்களுக்கான போராட்டம், பெண்களுக்கான முக்கியத்துவம், பெண் சுதந்திரம் என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி இன்னொரு பெண் பேசும்பொழுது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை என்னவோ மிகவும் சுவாரஸ்யமாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுதான் வருகிறது. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளிட்ட டுவிட்களை பார்த்த வனிதா கடுப்பாகியுள்ளார் .

பதிலடி கொடுத்த வனிதா

லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து வனிதாவை பற்றியும், அவருடைய மூன்றாவது திருமணம் பற்றியும் டுவிட்டரில் பேசி வருவது வனிதாவுக்கு மிகவும் கோபம் வரச் செய்துள்ளது. ஆதலால் பதிலடி கொடுப்பதற்காக டுவிட்டரில் வனிதா விஜயகுமார் ஒரு பதிவை டுவிட் செய்துள்ளார். மற்றவர்களுடைய அனுமதியில்லாமல் அவர்கள் குடும்பத்தை பற்றியோ, அவர்களது தனிப்பட்ட விஷயங்களையோ பேச வேண்டாம். “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என அதில் குறிப்பிட்டு கடுமையாக கடிந்து கொண்டுள்ளார் வனிதா விஜயகுமார். இது ஒருபுறம் இருக்க பல வாய்ஸ் மெசேஜ்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரில் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. அதில் அவர் கடுமையாக வார்த்தைகளையும் பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை மேலும் பெரிதாக்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த பதிவுகள் உண்மையானவையா என்ற எந்த ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் மொபைலில் இருந்து வந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here