சத்யா படத்தில் வரும் கமல்ஹாசன் கெட்டப் போல் இருக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எதார்த்த மனிதர்

எதார்த்தமான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், நம்மை கவர்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோக்கள் என்றாலே கோட்சூட் அணிந்துகொண்டு எப்போதும் கெத்தாக இருப்பது என்பது பல தரப்பிலும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. ஆனால் நமது பக்கத்து வீட்டுக்காரர் போல் எதார்த்தமான நடிப்பு, எதார்த்தமான பேச்சு மற்றும் அனைவரையும் கவரும் சிரிப்பு, அவரை மக்கள் மனதில் நிற்க வைக்கிறது. அந்த வகையில் கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, நான் மஹான் அல்ல, பலே பாண்டியா, சுந்தர பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் மக்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன்பிறகு அவர் தொட்ட அனைத்தும் வெற்றிதான். சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றும் தமிழர்களின் மனதில் மக்கள் செல்வன் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிப் படங்கள்

விஜய் சேதுபதியை பிற நடிகர்களுடன் ஒப்பிட்டாலும், அனைவரையும் நண்பர்களாகவே கொண்டுசெல்வது இவரின் பழக்கமாகவே வைத்திருக்கிறார். பல முன்னணி நடிகைகளுடன் நடிக்கும் விஜய் சேதுபதி தனது எதார்த்த நடிப்பால் நானும் ரவுடிதான், 96 போன்ற படங்களை வெற்றிப் படங்களாக மாற்றினார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகர்களுக்கும் ஆசை இருக்கும், அந்த வகையில் போலீஸாக நடித்து சேதுபதி படத்தை நன்றாகவே கையாண்டார்.

வில்லன் கதாபாத்திரம்

தன்னால் ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடிக்க முடியும் என்று பல படங்களில் நடித்து நிரூபித்தவர் விஜய் சேதுபதி. பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு அருமையாகவே பொருந்துகிறார். உதாரணத்திற்கு விக்ரம் வேதா படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறார். சமீபகாலமாக பல கிசுகிசுக்களில் சிக்கிய விஜய் சேதுபதி, அதை ஏதும் கண்டு கொள்ளாமல் தனது வேலையை மட்டும் செய்து வருகிறார். பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். உப்பன்ன என்ற தெலுங்கு படத்திலும், மாஸ்டர், லாபம், மாமனிதன், புஷ்பா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

கமல் ஸ்டைல்!

சமீபத்தில் விஜய் சேதுபதியின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், சத்யா படத்தில் வரும் கமல்ஹாசனின் கெட்டப்பை போலிருக்கிறது என்று கூறி வருகின்றனர். சின்ன முடி, அடர்ந்த தாடி, கையில் கண்ணாடி டம்பளருடன் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியை பார்த்து, கமல்ஹாசனின் ஸ்டைல் என்று பலரும் கூறி வருகின்றனர். இது எந்த படத்தின் புகைப்படங்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here