நாககன்னியாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பீலிங்ஸ் அடையச் செய்துள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.

சுவாரஸ்யமான நடிகை

மல்லிகா ஷெராவத் எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை. தனது புகைப்படங்களையும், சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும், ப்ளூப்பர்ஸ்களையும் அவ்வப்போது வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டே இருப்பார். அந்த வகையில் இப்பொழுது வெளியிட்டிருப்பது அவர் புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் hissss படத்தின் மேக்கப் ரகசியங்களைத் தான். எப்பொழுதும் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாத முக்கிய நடிகைகளில் பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் முக்கியமான பங்கு வகிக்கிறார். ஹரியானாவை சேர்ந்த இவர், மாடலிங்கை தனது வேலையாக செய்து கொண்டிருந்தார். அதன்பிறகு 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல வகையான சேலஞ்சிங் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

கவர்ச்சியாக நடித்தாலும், மிகவும் போல்டான நடிகை என்று பலரும் இவரை கூறி வருவது வாடிக்கையான ஒன்றாகும். ஆடைகளில் எப்போதும் சிக்கனத்தை கடைபிடித்தும், அதேபோல் கவர்ச்சியில் தாராளத்தையும் காட்டி வருவார். பல நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தான் ஒத்துழைக்காததால் பல படங்களிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறேன் என்று ஏராளமான புகார்களையும் அவர் தெரிவித்து பிரபலமாக பேசப்பட்டார். எப்பொழுதும் தைரியமாகவும், ஸ்டெரெயிட் பார்வர்டு ஆகவும் இருந்து வரும் நடிகைகளில் மல்லிகாவும் ஒருவர். தான் எவ்வளவு பரபரப்பான சூழலில் இருந்தாலும் அதனை ஈஸியாகவே எடுத்துக்கொண்டு எதார்த்தமாக இருக்கக்கூடியவர் மல்லிகா. தமிழில் தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தைரியமான வேடத்தில் நடித்த நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. கமல் ரசிகர்கள் முதல் இந்திய சினிமா துறையில் உள்ள அனைவரும் அவரது எதார்த்தமான நடிப்பை பெருமளவில் பாராட்டி வந்தனர். ஒஸ்தி படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து அவர் ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அவரது கவர்ச்சிக்கும் நடனத்துக்குமே ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்கள்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் சூழலில், மல்லிகாவும் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தோட்டம் ஒன்றில் அவர் கேட்வாக் செய்து வந்த வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோக்கள் அனைத்தும் அவர் ரசிகர்களால் பெருமளவு பேசப்பட்டது. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் அவர் நடித்துக்கொண்டிருக்கும் பாம்பு கதாபாத்திரத்தின் புகைப்படம் ஆகும். அந்த படத்தின் பெயர் hissss. அப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் சவாலாகவே இருந்ததாக கூறியுள்ள மல்லிகா, படத்திற்கான மேக்கப் ரகசியங்களையும் தெரிவித்துள்ளார். பாம்பு கதாபாத்திரத்தில் நடிப்பதால் பாம்பைப் போன்று முக கவசத்தையும், உடலமைப்பையும் அவருக்கு பொருத்தி இருக்கிறார்கள். அது மிகவும் சவாலாக இருந்ததாகவும், அதனை போட்டுக்கொண்டு நடிக்க ரொம்பவே சிரமப்பட்டதாகவும் தனது இணையதளப்பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதிலும் முகக்கவசத்தை கிட்டத்தட்ட 12 மணி நேரங்களுக்கு மேல் அணிந்து இருந்ததாக மல்லிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருந்தாலும், இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய அவரது ரசிகர்கள், அதனை பெருமளவில் ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர். கர்ப்பிணிப் பாம்பாக அவர் வெளியிட்ட புகைப்படம் பெருமளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது அந்தப் பாம்பின் முகத்தை பற்றி அவர் வெளியிட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here