வேலூரில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் சீண்டியதால் ஆத்திரமடைந்த அப்பெண் அந்த நபரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள் சிகிச்சை மற்றும் வெளி சிகிச்சைக்காக வேலூர் மட்டுமின்றி, கண்ணமங்கலம், பள்ளிகொண்டா, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் போன்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

வட்டமடித்த இளைஞர்

அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவருடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே சிகிச்சை மற்றும் செக் அப்காக பலர் வந்துள்ளனர். அப்போது 40 வயது பெண் ஒருவரை வெகுநேரமாக அங்கிருந்த இளைஞர் வட்டமடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடம் நெருங்கி வந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

செருப்பால் அடித்த பெண்

இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அப்பெண், தவறாக நடக்க முயன்ற இளைஞரை பிடித்து தனது காலில் இருந்த செருப்பால் சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த காவலர்களிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அந்த நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கூட சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவம் வேதனை அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here