பிரபல நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட யோகா செய்யும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

பிரபல நடிகை

இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தியில் ‘ஏக் தீவானா தா’, ‘ஃப்ரீக்கி அலி’ ஆகிய படங்களிலும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வந்த நடிகை எமி ஜாக்சன், 2.0 படத்திற்கு பிறகு, காதலர் ஜார்ஜ் பனாயிட்டுவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.

நிச்சயதார்த்தம், குழந்தை

திருமணம் செய்யாவிட்டாலும் காதலர் ஜார்ஜூடன் எமி வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமான அவர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார். இதனையடுத்து செப்டம்பர் 23ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் எமி ஜாக்சன். குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகும் நிலையில், பழையபடி செம ஃபிட்டாக மாறியுள்ளார் எமி.

களங்கத்தை அகற்றுங்கள்

நடிகை எமி ஜாக்சன் நீல நிற ஜிம் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து பதிவிட்ட புகைப்படத்திற்கு நடிகை சமந்தா லைக் போட்டுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரகுல் ப்ரீத் சிங், டாப்ஸி, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபல நடிகைகள் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில், ஆகாயத்தை பார்த்தபடி நின்று அலோ யோகா செய்வதாக கூறி நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போது, தியானம், மனப்பயிற்சி உள்ளிட்டவை நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியதை மேற்கோள் காட்டியுள்ள நடிகை எமி ஜாக்சன், 2020ம் ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனச்சோர்வு நமக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த தொற்று, பல ஆண்டுகளாக உலகளாவிய தொற்றாகும். மன ஆரோக்கியத்தை கெடுக்கும், சுற்றியுள்ள களங்கத்தை நாம் அகற்ற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here