வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்களுக்கு நடிகை சோனம் கபூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தற்கொலை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார். சுஷாந்தின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மனஅழுத்ததின் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படும் நிலையில், இது தற்கொலை அல்ல, கொலை என்று பாலிவுட் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பாலிவுட் நடிகர், நடிகைகள் பட வாய்ப்புகளை தடுத்ததாலேயே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பிரச்சாரம் செய்யும் வேலையில், நடிகர் சத்ருகன் சிங்காவின் மகளும் நடிகையுமான சோனாக்சி சின்ஹாவை கண்டித்து பதிவுகள் வெளியிட்டதால் அவர் டுவிட்டர் பக்கத்தை முடக்கிவிட்டு வெளியேறினார். பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் வலைத்தள பக்கத்திலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் சோனம் கபூருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் வசை பாடினர்.

சோனம் கபூர் பதிலடி

நெட்டிசன்களின் இந்த கருத்துக்கு நடிகை சோனம் கபூர் பதிலளிக்கையில்; ’நான் எனது தந்தையின் மகள்தான். அவரால்தான் இந்த இடம் எனக்கு கிடைத்து இருக்கிறது. விஷேச சலுகையும் பெற்றுள்ளேன். இது அவமானம் இல்லை. பெருமையாகவே நினைக்கிறேன். நான் இந்த இடத்துக்கு வருவதற்கு எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். நான் யாருக்கு பிறந்தேன் என்பது எனது விதி. எனது தந்தைக்கு மகளாக இருப்பதில் பெருமை” என்று கூறியுள்ளார். நடிகை சோனம் கபூர் தனுஷ்க்கு ஜோடியாக ராஞ்சனா இந்தி படத்தில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here